கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை


கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை
x

புதுவை - கடலூர் ரெயில்பாதை திட்டம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

புதுவை - கடலூர் ரெயில்பாதை திட்டம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

ரெயில்வே அதிகாரிகள்

தென்னக ரெயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வி.கே.குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று புதுச்சேரி வந்தது. இந்த குழுவினர் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்கள்.

அப்போது புதுவை ரெயில் நிலையம் மற்றும் புதுச்சேரிக்கான ரெயில் சேவைகளை மேம்படுத்துவது, ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் சிற்ப அரங்கு அமைப்பது, புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் வழிபாட்டு தலங்களுக்கு ரெயில் சேவையை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாமல்லபுரம்- கடலூர்

மேலும் வில்லியனூர் ரெயில் நிலையத்தை முக்கிய நிறுத்தமாக மேம்படுத்துவது, சென்னை- மாமல்லபுரம், கடலூர் (புதுச்சேரி வழியாக) வழித்தடத்திலான ரெயில் சேவை திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரெயில் சேவை மேம்பாட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கவர்னர் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலாளர்கள் முத்தம்மா, மணிகண்டன், கலெக்டர் வல்லவன், போக்குவரத்து ஆணையர் சிவக் குமார் ஆகியோர் உடனிருந் தனர்.

அதைத்தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் கடலூர் சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக நேரில் வந்து பார்வையிட்டனர்.

சிறுபான்மை ஆணைய...

இதனிடையே புதுவை வந்துள்ள தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் தான்யகுமார் ஜினப்பா குண்டே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை மரியாதை நிமித்தமாக கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது சமூக நலத்துறை இயக்குனர் குமரனும் உடனிருந்தார்.


Next Story