காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை


காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x

அரசு சார்பில் மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு முதல்-அமைச்சர் ரங்காமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி

அரசு சார்பில் மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு முதல்-அமைச்சர் ரங்காமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய். சரவணன்குமார், மாநில பா.ஜ.க. தலைவர் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், லட்சுமிகாந்தன், அரசு செயலர் முத்தம்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மும்மத பிரார்த்தனை

இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சியும், பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேசபக்திப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய ஊழியர்களின் நூல் நூற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காமராஜர் நினைவு நாள்

புதுவை அரசு சார்பாக பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காமராஜ் சாலை-அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் காந்திசிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story