கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும்


கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும்
x

போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் உத்தரவின்பேரில் காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி அனைத்து போலீஸ் நிலையம், புறக்காவல் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளதா? என்பதை கவனிக்கும் பொறுப்பு நிலைய அதிகாரிக்கு உள்ளது. இதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதால் திட்ட பொறியாளர், திட்ட மேலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story