புதுவையில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி

புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி தொடங்குவது குறித்து மத்திய மந்திரியுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
புதுவையில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி
Published on

புதுடெல்லி

புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி தொடங்குவது குறித்து மத்திய மந்திரியுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

சந்திப்பு

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினார். அப்போது பல்கலைக்கழக ஒப்புதலுடன் புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், தற்போது உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறித்தும், புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார்.

மத்திய மந்திரி உறுதி

மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் விவாதித்தார். பின்னர் இது தொடர்பான கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட அவர் இது தொடர்பாக பரிசீலித்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com