பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்


பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
x

பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக புதுச்சேரி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட பிரமுகர்களை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் சபாநாயகர் செல்வம் உருவப்படம் அச்சிடப்பட்ட 2 டிஜிட்டல் பேனர்களை மர்மநபர்கள் கிழித்தனர்.

இதுகுறித்து அபிஷேகப்பாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமமாலினி சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த வடிவேலு, கிருஷ்ணமூர்த்தி என்ற திவாகர், பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ஹேமமாலினியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் ஹேமமாலினி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து வடிவேலு உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story