மயங்கி விழுந்து காவலாளி திடீர் சாவு

அரியாங்குப்பம் அருகே பணியின் போது மயங்கி விழுந்து காவலாளி திடீரென உயிரிழந்தார்.
மயங்கி விழுந்து காவலாளி திடீர் சாவு
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் மணவெளி நேதாஜி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 54). இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கஜேந்திரன் அரசு நிறுவனமான பாப்ஸ்கோவில் வேலை செய்து வந்தார். அங்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், தற்போது காக்காயன்தோப்பு பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்துவந்தார்.

இன்று காலை வேலையில் இருந்த கஜேந்திரன் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com