துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்ப்யூட்டர், மின்சாதன பொருட்கள் திருட்டு


துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்ப்யூட்டர், மின்சாதன பொருட்கள் திருட்டு
x

கரையாம்புத்தூர் அருகே துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், மின்சாதன பொருட்கள் திருட்டு போனது.

பாகூர்

கரையாம்புத்தூர் அருகே துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், மின்சாதன பொருட்கள் திருட்டு போனது.

துணை ஆரம்ப சுகாதார நிலையம்

பாகூர் அருகே கரையாம்புத்தூர் அடுத்த பனையடிகுப்பம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு என அங்கு துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர், டாக்டர் மற்றும் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டி விட்டு கரையாம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வந்தனர்.

ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர், குளுக்கோ மீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் டாக்டர் கிருத்திகா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story