புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் கடற்கரையில் செல்பி எடுத்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் வலம் வந்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

புதுவை,

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. சுற்றுலா பயணிகள் புதுவை கடற்கரையில் செல்பி எடுத்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் வலம் வந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. புதுச்சேரியில் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com