சுடுமண் சிற்ப பயிற்சியில் துருக்கி மாணவர்கள் ஆர்வம்


சுடுமண் சிற்ப பயிற்சியில் துருக்கி மாணவர்கள் ஆர்வம்
x

புதுவையில் சுடுமண் சிற்ப பயிற்சியில் துருக்கி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.

புதுச்சேரி

பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்ப கலைஞரான முனுசாமி கணுவாய்ப்பேட்டையில் தனி பயிற்சிகூடம் அமைத்து சிற்ப பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் வெளிநாட்டவர் பலரும் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் துருக்கி நாட்டிலிருந்து மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார பயணமாக திருச்சிற்றம்பலத்துக்கு வந்துள்ளனர். அங்கு தங்கி இருக்கும் அவர்கள் இங்குள்ள கல்வி மற்றும் கலாசாரத்தை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் முனுசாமியிடம் சுடுமண் சிற்பம் தயாரிப்பது குறித்து ஆர்வத்துடன் பயிற்சியும் பெற்று வருகின்றனர். அழிவின் விளிம்பில் உள்ள சுடுமண் சிற்ப கலையை வெளிநாட்டு மாணவர்களுக்கு கற்று தருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த தலைமுறைக்கும் இந்த கலையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story