தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளின் சுகாதார சீர்கேடுகளை களையவேண்டும், மாணவர்களுக்கான சிறப்பு பஸ்சை உடனடியாக இயக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இணை செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க ஜெயப்பிரகாஷ், இளைஞர் வாலிபர் சங்க ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் கொளஞ்சியப்பன், துணைத் தலைவர் ஆனந்தன், செயலாளர் ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி துறை செயலாளர்கள் சரவணன், ராம்ஜி, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com