ஈரநில விழிப்புணர்வு ஓவிய போட்டி

புதுவை மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச ஈர நில விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது.
ஈரநில விழிப்புணர்வு ஓவிய போட்டி
Published on

புதுச்சேரி

புதுவை மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச ஈர நில விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஆசிரியை பத்மா வாழ்த்தி பேசினார். ஆசிரியர் ஜான் பெந்தகோஸ் வரவேற்றார்.

ஆசிரியை பரமேஸ்வரி ஈர நிலத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஈர நிலங்கள் பாதுகாப்பு, பல்லுயிர்ப்பன்மங்கள் என்ற தலைப்பில் சிறந்த ஓவியங்கள் விரைந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை அனிதா செய்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com