கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு
Published on

புதுச்சேரி

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 31 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான போட்டி தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி, நேரம், தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு இணையதளங்களிலும், முன்னணி பத்திரிகைகளிலும் வெளியிடப்படும் என்று நில அளவைத்துறை சார்பு செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com