2 புதிய மோட்டார் சைக்கிள் டிரையம்ப்

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் டிரையம்ப் நிறுவனம் புதிதாக ஸ்பீடு டுவின் 900 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 900 என்ற பெயரில் இரண்டு மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
2 புதிய மோட்டார் சைக்கிள் டிரையம்ப்
Published on

இவை இரண்டுமே 900 சி.சி. திறன் கொண்டவை, 64 ஹெச்.பி. திறன் மற்றும் 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியவை.

ஸ்பீடு டுவின் மாடல் மூன்று வண்ணங்களில் (ஜெட் கருப்பு விலை சுமார் ரூ.8.35 லட்சம், மேட் அயர்ன்ஸ்டோன் விலை சுமார் ரூ.8.48 லட்சம் மற்றும் மேட் சில்வர் ஐஸ் விலை சுமார் ரூ.8.48 லட்சம்) கிடைக்கும். ஸ்கிராம்ப்ளர் 900 மாடலும் மூன்று வண்ணங்களில் (ஜெட் கருப்பு விலை சுமார் ரூ.9.45 லட்சம், மேட் காக்கி சுமார் ரூ.9.58 லட்சம், கார்னிவல் சிவப்பு சுமார் ரூ.9.75 லட்சம்) கிடைக்கும். இவை இரண்டுமே லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டவை. 5 கியர்கள் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டவையாக வந்துள்ளன.

இரண்டு சக்கரங்களும் டிஸ்க் பிரேக் வசதி மற்றும் 12 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட டேங்க் கொண்டவை. ஸ்பீடு டுவின் மாடல் 216 கி.கி எடை கொண்டதாகவும், ஸ்கிராம்ப்ளர் மாடல் 223 கி.கி. எடை கொண்டதாகவும் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com