

ஒரு நாடு எவ்வளவு வலிமையானது என்று எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? வலுவான ராணுவத்தை கொண்டுள்ள நாடுகள் எல்லாம் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
உலகளவில் அதிக ராணுவ விமானங்கள் வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? இந்தியாவிடம் எத்தனை ராணுவ விமானங்கள் உள்ளன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் ராணுவ விமானங்கள் சக்தி வாய்ந்தவை மற்றும் பல புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டவை.
போர் விமானங்கள், வீரர்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானங்கள் என ராணுவத்தில் பல வகையான விமானங்கள் உள்ளன.
முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. சுமார் 13 ஆயிரத்து 32 சக்தி வாய்ந்த ராணுவ விமானங்களைக் கொண்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த ராணுவம் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.
இரண்டாம் இடத்தில் ரஷியா இருக்கிறது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 100-க்கும் அதிகமான சக்திவாய்ந்த ராணுவ விமானங்கள் உள்ளன.
மூன்றாம் இடத்தில் சீனா உள்ளது. அதன் வசம் சுமார் 3 ஆயிரத்து 300-க்கும் அதிகமான சக்திவாய்ந்த ராணுவ விமானங்கள் இருக்கின்றன.
நான்காம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. சுமார் 2 ஆயிரத்து 183 சக்தி வாய்ந்த ராணுவ விமானங்கள் உள்ளன.
ஐந்தாம் இடத்தில் தென்கொரியா உள்ளது. அந்நாட்டில் ஆயிரத்து 500-க்கும் அதிகமான சக் திவாய்ந்த ராணுவ விமானங்கள் உள்ளன.
ராணுவ விமானங்கள் ஒரு நாட்டின் வலிமையையும், பாதுகாப்பையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன. நமது நாடும் விமானப்படையில் தொடர்ந்து பல புதிய தொழில்நுட்பங்களுடன் முன்னேறி வருவது நமக்கு பெருமையான விஷயம்.