இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 771 பணியிடங்கள்

தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு கழக நிறுவனம் சுருக்கமாக இ.எஸ்.ஐ. கழகம் எனப்படுகிறது.
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 771 பணியிடங்கள்
Published on

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் மருத்துவமனை-கல்லூரிகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது. தற்போது இந்த மருத்துவ மனைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சமீபத்தில் புதுடெல்லி இ.எஸ்.ஐ. தலைமையகத்தில் இருந்து பல்வேறு கிளைகளிலும் இன்சூரன்ஸ் மெடிக்கல் ஆபீசர் (கிரேடு 2- அலோபதி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 771 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 338 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 122 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 59 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 252 இடங்களும் உள்ளன. மாநில வாரியாக 17 மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் 11 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 10-11-2018-ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், துறை பணியாளர்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 13-11-2018-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.

இவை பற்றிய விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com