

வேளாண் அலுவலர் (365), உதவி வேளாண் அலுவலர் (122), உதவி தோட்டக்கலை அலுவலர் (307), தோட்டக்கலை உதவி இயக்குனர் (28), தோட்டக்கலை அலுவலர் (169) என மொத்தம் 991 பணி இடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
வேளாண் அலுவலர் பதவிக்கு பி.எஸ்சி, வேளாண்மை படிப்பும், உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு 12-ம் வகுப்புடன் வேளாண் சார்ந்த 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும், உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 12-ம் வகுப்புடன் தோட்டக்கலை சார்ந்த 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தோட்டக்கலை உதவி இயக்குனர் பதவிக்கு தோட்டக்கலை, பழ அறிவியல், மலர் வளர்ப்பு, காய்கறி அறிவியல், மசாலா/மருத்துவ மற்றும் நறுமண செடி வளர்ப்பு இவற்றுள் ஏதாவதொரு முதுகலைப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பு படித்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-3-2021.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் விதம், விண்ணப்பிக்கும் வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு, தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்பட விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.