மூன்று இதயம் கொண்ட 'கனவாய் மீன்'

ஆங்கிலத்தில் ‘Culttlefish’ எனப்படும் ‘கனவாய் மீன்’ என்று அழைக்கப்படுகிறது. கடல் மீன்களில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது.
மூன்று இதயம் கொண்ட 'கனவாய் மீன்'
Published on

இந்த மீன் ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதனை 'செப்பலோடபாட்ஸ்' எனவும் அழைக்கின்றனர். கனவாய் மீனுக்கு மிகப்பெரிய இதயம் உள்ளது. உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல. மூன்று இதயங்கள் உள்ளது. அதில் இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லவும். மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லவும் பயன்படுகின்றன.

இந்த மீனின் உடல் அமைப்பு தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள், பெரியவகை மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடலின் நிறத்தை மாற்றும் சக்தி படைத்தது. அது எந்த இடத்தில் இருக்கிறதோ, அதன் பின்புல நிறத்திற்கு ஏற்ப தன்னுடைய உடல்நிறத்தையும் மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. கனவாய் மீனின் ரத்தத்தில், காப்பர் அதிகமாக இருப்பதால், அதன் ரத்தத்தின் நிறம் பச்சையும், நீலமும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே இதை 'ராஜா மீன்' என்கின்றனர்.

தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்புநிற திரவத்தை வெளியிட்டு, தன்னைத்தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரத்தையும் கனவாய் மீன்கள் உபயோகிக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com