பறவைகள் கல் சிலையாகும் மர்ம ஏரி!

ஏரியின் அருகில் உள்ள ஓல் டோய்ன்யோ லெங்காய் எரிமலையில் இருந்து சோடியம் கார்பனேட் உப்பு கலக்கிறது.
பறவைகள் கல் சிலையாகும் மர்ம ஏரி!
லேக் நேட்ரான் ஏரி
Published on: 

ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு மர்ம ஏரி இருக்கிறது. அதில் இறந்த பறவைகள், வெளவால்கள் எல்லாம் கல் சிலைகள் போல் காட்சி அளிக்கின்றன. அதனால் தான் அதற்கு “கற்களின் கல்லறை” என்று பெயர் வந்தது.

எங்கே இருக்கிறது?

ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டின் வடக்கில் உள்ள லேக் நேட்ரான் ஏரி தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இந்த ஏரியில் இறந்த பறவைகள் கல் சிலைகள் போல் மாறி விடுகின்றன. 2013-ல் புகைப்படக் கலைஞர் நிக் பிராண்ட் எடுத்த புகைப்படங்கள் தான் இந்த ஏரியை பிரபலமாக்கியது.

ஏன் கல்லாகிறது?

ஏரி நீரின் பி.ஹச் 10.5 முதல் 12 வரை. அம்மோனியா மாதிரி அரிக்கும் தன்மை கொண்டது. இந்த ஏரியின் அருகில் உள்ள ஓல் டோய்ன்யோ லெங்காய் எரிமலையில் இருந்து சோடியம் கார்பனேட் உப்பு கலக்கிறது. உயிரோடு இருக்கும் போது எந்த உயிரினமும் கல்லாக மாறாது.

வெயில் காலத்தில் தண்ணீர் 60 டிகிரி வரை சூடாகும். இதில் சோடியம் கார்பனேட் உப்பு, பண்டைய எகிப்தியர்கள் மம்மி செய்ய பயன்படுத்திய அதே பொருள் ஆகும். இறந்த பறவைகளின் உடலில் இந்த உப்பு படிந்து, அழுகாமல் பாதுகாக்கிறது. இதனால் தான் கல் சிலை போல் தெரிகிறது.

இந்த ஏரி ஆபத்தா?

இந்த ஏரி உள்ள உப்பை விரும்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரை ரத்த சிவப்பாக மாற்றுகின்றன. உலகில் சுமார் 25 லட்சம் பிளமிங்கோ பறவைகள் குஞ்சு பொரிக்கும் ஓரே இடம். இந்த பறவைகளுக்கு மட்டும் இந்த உப்பு நீர் ஆபத்து இல்லை. அவை இங்குள்ள பாசியை சாப்பிட்டு இளசிவப்பு நிறம் பெறுகின்றன,

மற்ற பறவைகளுக்கு எமன்

ஏரி தண்ணீர் கண்ணாடி மாதிரி மின்னும். பறவைகள் அதை தரைன்னு நினைச்சு வேகமா வந்து மோதி விழுந்துவிடும். சாதாரண பறவை உடம்புக்கு இந்த தண்ணி அம்மோனியா மாதிரி. கண்ணு, தோல், இறக்கை எல்லாம் எரியும்.

பறக்க முடியாம தண்ணிலயே மாட்டி கொள்ளும். தண்ணி 60 டிகிரி வரை சூடாகும். உடம்புல இருக்கிற தண்ணியை எல்லாம் உப்பு உறிஞ்சிடும். இதனால் அந்த பறவைகள் எல்லாம் இறந்துவிடும்.

X