"மேகங்களில் மிதந்து வரும் புதிய ஆபத்து..?" - மழை நீரில் பூமிக்கு வரலாம் என எச்சரிக்கை...

க்டீரியாக்களை மேகங்கள் சுமந்து உலகெங்கும் சுற்றித்திருவதாக அன்மையில் வெளியான ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

கோடை வெயில் கொளுத்தும் இந்த வேளையிலும் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. ஆனால் இந்த மழையுடன் சேர்த்து பெரிய ஆபத்தும் பூமிக்கு வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம். மருந்துகளுக்கெல்லாம் அடங்காத பாக்டீரியாக்களை மேகங்கள் சுமந்து உலகெங்கும் சுற்றித்திருவதாக அன்மையில் வெளியான ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

மத்திய பிரான்சில் உள்ள செயலிழந்த எரிமலையின் மேல் அமைந்துள்ள வளிமண்ட ஆராய்ச்சி மண்டலத்தில் 2019 முதல் 2021 வரை மூன்ற ஆண்டுகள் சேகரிக்கப்பட்ட மேக மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மேகநீரில் ஒரு மில்லி லிட்டரில் 330 முதல் 30,000 வரை பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருந்துகளுக்கு கட்டுப்படாத ஒருசில பாக்டீரியாக்களும் இதில் அடங்கும் என கூறப்பட்டு உள்ளது.

இயற்கை சூழலில் மண் மற்றும் இலைகளில் கானப்படும் இந்த வகை பாக்டீரியாக்கள், காற்றின் வழியே தூக்கிச்செல்லப்பட்டு மேகங்களில் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே இந்த கோடை மழையில் நனைந்து குதுகலிப்பவர்கள், சற்று கவனமுடன் இருப்பது நல்லது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com