அப்துல்கலாம் சிந்தனை வரிகள்

மாணவர்களை ‘கனவு காணுங்கள்’ என்று வலியுறுத்தியவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல.. உங்களை தூங்கவிடாமல் செய்வது’ என்பதும் அவர் சிந்தனை வரிகளில் முக்கியமானது.
அப்துல்கலாம் சிந்தனை வரிகள்
Published on

இதுபோல் அவர் கூறிய சில சிந்தனை வரிகள், மாணவர்களுக்காக..

* உலகம் ஒரு விசித்திரமான கல்விக்கூடம். இங்கே பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

* நீங்கள் விரும்புவது ஒரு வேளை உங் களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

* நீ முன்னேறிக்கொண்டிருக்கும்போது, மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள். ஒரு வேளை நீ பின்னடைவை சந்திக்க நேர்ந்தால், யாராவது உனக்கு உதவுவார்கள்.

* அனைவரும் தங்கள் வாழ்வில் துன்பங் களைச் சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால் எல்லா துன்பங்களுக்கும் காலம், மவுனம் என்று இரண்டு மருந்துகள் இருக்கின்றன. அவை நம் துன்பங்களை ஆற்றும் சக்தி படைத்தவை.

* நாம் இதுவரை இழந்ததை நினைத்து வருந்தக்கூடாது. அது முக்கியம் அல்ல. நம்மிடம் இப்போது என்ன மிச்சம் இருக்கிறது என்பது தான் முக்கியம். எனவே நல்ல நண்பர்களை அரவணைத்துச் செல்லுங்கள். நல்ல நினைவுகளை சேமித்து வையுங்கள்.

* பணத்தை எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல, சிக்கனம். பணத்தை எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறோம் என்பதில்தான் சிக்கனம் இருக்கிறது.

* பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், புதுமையைச் சிறப்பாகச் செய்ய முடியாது. எனவே பழமையை மறக்கக்கூடாது.

* கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதி காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com