கேமராவுடன் ஹோண்டா ஆப்பிரிக்கா டுவின் மோட்டார் சைக்கிள்

இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான ஆப்பிரிக்கா டுவின் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கேமராவைப் பொருத்தி அறிமுகம் செய்கிறது.
கேமராவுடன் ஹோண்டா ஆப்பிரிக்கா டுவின் மோட்டார் சைக்கிள்
Published on

இது வாகனத்தின் முகப்பு விளக்கிற்கு மேல் இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. அதிர்வுகளைத் தாங்கி துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்டதாக இந்த கேமரா உள்ளது.

சாகச பயணம் மேற்கொள்வோர் பயணிக்கும் கரடு, முரடான சாலைகளின் தன்மைகளையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு பொருத்தப் பட்டுள்ளது. சாலையின் கரடு, முரடான பகுதிகள் மற்றும் சேறு, சகதி உள்ளிட்டவற்றை இது துல்லியமாக படம் பிடித்து அறிவுறுத்தும். கே.டி.எம். மற்றும் டுகாடி நிறுவனங்கள் இதுபோன்று கேமராக்களைப் பொருத்திய மாடல்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ஹோண்டாவின் ஆப்பிரிக்கா டுவின் மாடலும் இடம்பெறும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com