காற்று மாசுபாடும்.. கருச்சிதைவும்..!

காற்று மாசுபாடு உலகளாவிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகின் மற்ற நகரங்களை ஒப்பிடும்போது தலைநகர் டெல்லிதான் கடும் காற்று மாசுபாடு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
காற்று மாசுபாடும்.. கருச்சிதைவும்..!
Published on

மாசுபட்ட காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு கேடு விளைவிப்பதோடு ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் மாசடைந்த காற்றை சில நிமிடங்கள் சுவாசிக்க நேர்ந்தால் கூட கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உத்தா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்று மாசுவை ஏற்படுத்தும் வாயுக்களில் நைட்ரஜன் டை ஆக்சைடு முக்கியமானது. அந்த வாயுவை சுவாசிக்க நேரிடுபவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட மேத்யூ புல்லர் கூறுகையில், "காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. நாளுக்கு நாள் காற்று மாசுவின் வீரியம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்கிறார்.

இந்த ஆய்வுக்கு 1,300 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் 28 வயதுக்குட்பட்டவர்கள். கர்ப்பிணிகளும் இதில் இடம் பெற்றனர். காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மட்டுமின்றி எப்போது வெளியே சென்றாலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com