அமேஸ்பிட் பி.ஐ.பி 3 ஸ்மார்ட் கடிகாரம்

அமேஸ்பிட் நிறுவனம் பி.ஐ.பி 3 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
அமேஸ்பிட் பி.ஐ.பி 3 ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இது 1.69 அங்குல திரையைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கு வரும் செய்திகள், நினைவூட்டிகள் உள்ளிட்ட விவரங்களை எளிதாகப் படிக்க இது உதவும். உடலின் பிட்னெஸ் திறனை இது துல்லியமாக பதிவு செய்யும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை மதிப்பிடுவது மற்றும் இதய துடிப்பு, மன இறுக்கம் உள்ளிட்ட விவரங்களை இது துல்லியமாக அளிக்கும். 60 வகையான விளையாட்டுகளில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் உங்களது உடலில் எரிக்கப்படும் கலோரி சக்தியை துல்லியமாக மதிப்பிடும்.

புளூடூத் 5.0 இணைப்பு வசதி, நீர் புகா தன்மை கொண்டது. 280 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை கடிகாரம் செயல்பட வழிவகுக்கிறது. கருப்பு, இளம் சிவப்பு, நீல நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.3,499.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com