

மின்னணு உதிரி பாகங்கள் தயாரிக்கும் அம்பரேன் நிறுவனம் புதிதாக ஸ்டைலோ சீரிஸ் ரக பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வந்துள்ள ஸ்டைலோ புரோ பவர் பேங்க் 27 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை உள்ளடக்கியது. இது 20 வாட் திறனை வெளிப் படுத்துவதால் உடனடியாக சார்ஜ் ஆகும். 2 யு.எஸ்.பி. அவுட்புட் மற்றும் மைக்ரோ இன்புட் வசதி கொண்டது.
மேலும் டைப் சி இன்புட் வசதியும் உள்ளது. பச்சை மற்றும் நீல நிறங்களில் வந்துள்ளது. மின் அழுத்த வேறுபாட்டில் பாதிக்காத வகையில் 12 மேலடுக்கு களைக் கொண்ட சிப்செட் இதில் உள்ளது. மேல் பகுதி ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் ஆனது. இதனால் இதன் எடையும் குறைவானது. இதில் உள்ள பேட்டரி அளவைக் காட்ட இன்டிகேட்டர் விளக்கும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,999.