ஆங்கர் நெபுலா ஸ்டார் வார்ஸ் புரொஜெக்டர்

ஆங்கர் தயாரிப்புகளில் நெபுலா சீரிஸ் புரொஜெக்டர்கள் மிகவும் பிரபலமானவை. இதில் குறைந்த எண்ணிக்கையில் ஸ்டார் வார்ஸ் ஆர் 2டி 2 புரொஜெக்டர்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆங்கர் நெபுலா ஸ்டார் வார்ஸ் புரொஜெக்டர்
Published on

இது ஸ்டார் வார்ஸ் வரிசையில் இடம்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 டி.வி. இயங்குதளம் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட், குரோம் காஸ்ட் உதவியோடு இது செயல்படும்.

இதிலிருந்து வெளிப்படும் ஒளி மூலம் 100 அங்குல திரையில் காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். இதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.52,500. புளூடூத் ஸ்பீக்கர் உள்ளது. ஆக்சிலரி போர்ட், யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் யு.எஸ்.பி. சி போர்ட் வசதிகள் உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com