

இது 65 வாட் திறன் கொண்டது. இதில் நான்கு யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் பாயிண்ட் உள்ளது. இதன் எடை 140 கிராம். இதன் மூலம் லேப்டாப், மேக்புக் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்ய முடியும். இதன் மூலம் ஒரே சமயத்தில் 20 வாட் திறன் கொண்ட மூன்று மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.
இதில் ஐகியூ 3.0 தொழில்நுட்பம் உள்ளதால் மின்னணு சாதனங்கள் விரைவாக சார்ஜ் ஆகும். மேலும் பன்முக பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளதால் மின்னணு சாதனங்கள் சூடேறுவது, அதிக மின்னழுத்தம் பாய்வது உள்ளிட்ட பிரச்சினைகள் தவிர்க்கப்படும். இதன் விலை சுமார் ரூ.3,999.