நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்ட்ராபெர்ரி ஏற்றதா?

அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களுடன் ஒப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவை படிப்படியாக அதிகரிக்கச் செய்யும்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்ட்ராபெர்ரி ஏற்றதா?
Published on

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்ற அச்சத்தில் சில பழங்களை சாப்பிடுவதில்லை. இருப்பினும் எல்லா பழங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. அவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஸ்ட்ராபெர்ரி. இவை இயற்கையாகவே இனிப்பானவை, குறைந்த கலோரி கொண்டவை, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தவை. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தபழம் ஏன் ஏற்றது என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

ஸ்ட்ராபெர்ரி அதிக நார்ச்சத்து கொண்டது.

குளுக்கோஸ் வெளியீட்டு வேகத்தை குறைத்து, வயிறு நிறைந்த உணர்வை தக்கவைக்கும்.வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்தது என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. வளர்சிதை மாற்றத்திற்கு பயனளிக்கும் ஆந்தோசயனின்கள் எனப்படும் தாவரச்சேர்மங்கள் ஸ்ட்ராபெர்ரியில் அதிகமாக உள்ளன.இதன் கிளைசெமிக் குறியீடு 40 மட்டுமே. அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களுடன் ஒப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவை படிப்படியாக அதிகரிக்கச் செய்யும். அதனால்தான் சாப்பிட்ட பிறகு ரத்த குளுக் கோஸ் அளவு திடீரென உயர்வதை குறைப்பதில் ஸ்ட்ராபெர்ரி சிறந்ததாக கருதப்படுகிறது.

எப்படி சாப்பிடலாம்?

ஸ்ட்ராபெர்ரியை அப்படியே சாப்பிடலாம். ஆனால் அதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க, புரதம் அல்லது ஆரோக்கியமான கொழுப்புகளான நட்ஸ் மற்றும் தயிருடன் சேர்ந்து உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் ஒருகப் ஸ்ட்ராபெர்ரி (120 முதல் 150 கிராம்) சாப்பிடுவது போதுமானது. காலை மற்றும் மதிய உணவுக்கு மத்தியில் சிற்றுண்டியாகவோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்போ சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதை கட்டுப்படுத்தவும், பதப்படுத்தப்பட்ட இனிப்பு உணவுகளின் மீதான ஆசையை கட்டுப்படுத்தவும் உதவும் நார்ச்சத்தை யும் ஸ்ட்ராபெர்ரி வழங்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com