

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பாலியல் ரீதியாகத் தூண்டும் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களைக் குறைக்க, தனது பரிந்துரை வழிமுறைகளில் மாற்றங்களைச் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியிலான பதிவுகள், வன்முறைக் காட்சிகள் மற்றும் விரும்பத்தகாத அம்சங்கள் ஏராளமாக பதிவிடப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதாவது தவறாக வழிநடத்தக்கூடிய. தவறான பின்னணியில் பகிரப்படும் அம்சங்கள் அதிக அளவில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், தங்களது உள்ளடக்கத் தரவரிசை மற்றும் பரிந்துரை முறைகளை மறுஆய்வு செய்யுமாறு தெரிவித்தது.
அதன்படி பாலியல் ரீதியான பதிவுகள், வன்முறைக் காட்சிகளை பயனாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதைக் கட்டுப்படுத்த இன்ஸ்டாகிராம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியப் பயனர்களுக்காக இன்ஸ்டாகிராம் தனது பதிவுகள் பரிந்துரை முறையில் (அல்காரி தம்- ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு அல்லது ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு கணினிக்குக் கொடுக்கப்படும் படிப்படியான வழிமுறைகளின் தொகுப்பு) மாற்றங்களைச் செய்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
பொதுவாக, இன்ஸ்டாகிராமில் நாம் பின்தொடரும் கணக்குகளின் பதிவுகள் மட்டுமின்றி, நமக்குத் தொடர்பில்லாத பல கணக்குகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களும் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு பரிந்துரைக்கப்படும் பதிவுகளில் சில நேரங்களில் பாலியல் ரீதியாகத் தூண்டும் காட்சிகள், வன்முறை நிறைந்த வீடியோக்கள் மற்றும் விரும்பத்தகாத உள்ளடக்கங்கள் இடம் பெறுகின்றன. இவற்றைக் கண்டறிந்து பயனாளர்களுக்குக் காட்டப்படுவதைக் குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். ஒவ்வொரு பதிவையும் ஆய்வு செய்து, அது பரிந்துரைக்க ஏற்றதா என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும். இதனால் பயனாளர்கள் புகார் அளித்த பிறகே நடவடிக்கை எடுக்கும் நிலை மாறி, தேவையற்ற பதிவுகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும்.
கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பயனாளர் கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்படும் பதிவுகள் குறித்து அளிக்கும் புகார்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அனைத்து ஆபாசமான அல்லது வன்முறைக் காட்சிகள் கொண்ட பதிவுகளும் முழுமையாக நீக்கப்படும் என்று இதற்குப் பொருள் அல்ல. இன்ஸ்டாகிராமின் சமூக வழி காட்டுதல்களை மீறும் பதிவுகள் மட்டுமே நீக்கப்படும். மற்ற உணர்வுப்பூர்வமான அல்லது விரும்பத்தகாத பதிவுகள் தளத்தில் இருக்கலாம். ஆனால் அவை அதிகமானோருக்குப் பரிந் துரைக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்குத் தேவையற்ற பதிவுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளையும் இன்ஸ்டாகிராம் வழங் குகிறது. Sensitive Content Control என்ற வசதி மூலம் உணர்வுப்பூர்வமான பதிவுகள் குறை வாகத் தோன்றும்படி பயனாளர்களே அமைத்துக்கொள்ளலாம். மேலும், பிடிக்காத பதிவுகளில் Not Interested என்பதைத் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட சொற்கள், வாசகங்கள் மற்றும் எமோஜிகள் அடங்கிய கருத்துகளைத் தடுக்கும் Ilidden Words வசதியும் உள்ளது. குறிப்பிட்ட கணக்குகளைத் தடை செய்யும் வசதியும் வழங்கப்படு கிறது.
சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு Teen Accounts என்ற சிறப்பு கணக்கு வசதி யையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக் குப் பொருத்தமான உள்ளடக்கங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றில் பகிரப்படும் தகவல்கள் குறித்த அரசின் கண்காணிப்பு அதிகரித்து வரும் நிலையில், மெட்டாவின் இந்த நடவடிக்கை முக்கி யத்துவம் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல, பயனாளர்களின் பொறுப்பும் ஆகும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இணையத்தில் பார்க்கும் அம்சங்கள் அவர்களின் மனநிலையையும், சிந்தனை யையும் பாதிக்கக்கூடும்.
எனவே. தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரும்பத்தகாத பதிவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவதும் அவசியம்தான்..!