

இந்த இயந்திரத்தில் கார்பன் பில்டர், ஏர் பம்புகள், சோலார் பேனல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் கழிவுகளை 20 நாட்களில் உரமாக மாற்றும். பூமி என்று இந்த இயந்திரத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் அபய் கரான்டிகர் கூறுகையில், கழிவு மேலாண்மைதான் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இந்த இயந்திரம் அமையும். இயற்கைக் கழிவுகளை உரமாக்கும் இந்த இயந்திரம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் இயந்திரங்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், உணவகங்களிலும், நிறுவனங்களிலும் வைக்கலாம். இதனை எளிதாகக் கையாளலாம். மற்ற இயந்திரங்களைவிட இந்த இயந்திரம் 30 சதவிகிதம் விலை குறைவாக இருக்கும் என்றார்.