பஜாஜ் பல்சர் என் 160

பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது பல்சர் ரக மோட்டார் சைக்கிள்கள். இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலும் இதுவே. இதில் தற்போது என் 160 என்ற புதிய மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் பல்சர் என் 160
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,22,854. ஏ.பி.எஸ். மாடல் விலை சுமார் ரூ.1,27,853 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் முகப்பு விளக்கில் புரொஜெக்டர் மாடல் எல்.இ.டி. இடம்பெற்றுள்ளது. இத்துடன் பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கும் இடம் பெற்றுள்ளது வாகனத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. பின்புற விளக்குகள் தொகுப்பும் எல்.இ.டி.யால் ஆனவையே. இரண்டு தனித்தனி இருக்கைகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 164.82 சி.சி. திறன் கொண்ட 16 பி.எஸ். மற்றும் 14.65 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடிய என்ஜினைக் கொண்டுள்ளது. இது ஆயில் கூல்டு என்ஜின் வடிவமைப்பாகும். 250 சி.சி. மோட்டார் சைக்கிளில் உள்ள சேசிஸ் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 31 மி.மீ. அளவிலான டெலஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரைக் கொண்டுள்ளது.

இதில் 300 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனத்துக்கு கம்பீர மான தோற்றத்தைத் தரும் வகையிலான பெட்ரோல் டேங்க் 14 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இதன் மொத்த எடை 152 கிலோவாகும். காற்றில் சீறிச் செல்லும் வகையில் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com