பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 500 அதிகாரி (ஏ.ஓ.) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை
Published on

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கி தொடர்புடைய பணிகளில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1-2-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-3-2023. மேலும் விரிவான விவரங்களை https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com