பி.எம்.டபிள்யூ. எம் 5 காம்படீஷன்

சொகுசு ரக பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம் 5 காம்படீஷன் என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
பி.எம்.டபிள்யூ. எம் 5 காம்படீஷன்
Published on

சொகுசு ரக பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம் 5 காம்படீஷன் என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இது முழுவதும் வெளிநாட்டில் உள்ள இந்நிறுவன ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மறு வடிவமைப்பிலான சேசிஸ், புதிய வலுதாங்கும் ஷாக் அப்சார்பர்கள் சொகுசான பயணத்தை அளிக்கிறது. 4.4 லிட்டர் 8 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இதில் டுவின் பவர் டர்போ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

625 ஹெச்.பி. திறன் மற்றும் 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இது 6-வது தலைமுறை மாடலாகும். இதன் விலை சுமார் ரூ.1.62 கோடி. முன்புற கிரில் அமைப்பில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. லேசர் முகப்பு விளக்கு, எல் வடிவிலான பகலில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் தோற்றப் பொலிவை மெருகேற்றுகிறது. அதற்கேற்றவாறு பம்பரின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இது 20 அங்குல அலாய் சக்கரத்தைக் கொண்டுள்ளது. உள்புறம் 12.3 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

நான்கு நிலைகளில் காரின் குளிர் நிலையை கட்டுப்படுத்தும் வசதி, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 16 ஹர்மான் கார்டோன் ஸ்பீக்கர் அளிக்கும் சரவுண்ட் சிஸ்டம் இனிய இசையை அளிக்கும். மேற்கூரை திறந்து மூடும் வகையிலான மாடலையும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். உடல் அலுப்பைப் போக்கும் வகையில் மசாஜ் வசதி கொண்ட முன் இருக்கைகள் அமைந்திருக்கின்றன. இது நீண்ட பயணத்திலும் அலுப்பு தராத வகையில் சொகுசாக செல்ல உதவும். 8 ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. நான்கு சக்கர சுழற்சி உடையது. இதை ஸ்டார்ட் செய்து 3.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிட முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com