

அழகிய வடிவில், கழுத்தில் எளிதில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது.
மென்மையான தொடுதலில் செயல்படும் வகையில் வடிவமைக்கப் பட்டது. குரல்வழிக் கட்டுப்பாட்டிலும் செயல்படும். நீர் புகா தன்மை கொண்டது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் (25 டெசிபல் வரை) நுட்பம் கொண்டது. கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் வந்துள்ள வயர்லெஸ் நெக்பேண்டின் விலை சுமார் ரூ.1,299.