பிராபஸ் 1300 ஆர் எடிஷன் 23

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பிராபஸ் நிறுவனம் புதிதாக 1300 ஆர் எடிஷன் 23 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பிராபஸ் 1300 ஆர் எடிஷன் 23
Published on

சொகுசு கார்களில் முதலிடத்தைப் பிடிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் காரைப் போன்று இருசக்கர வாகனங்களில் பிராபஸ் மோட்டார் சைக்கிள் இடம் பெறும் என கருதப்படுகிறது.

ஒவ்வொரு நிறத்திலும் 145 மோட்டார் சைக்கிள் மட்டுமே உருவாக்கப்பட்டு மொத்தமே 290 மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதி கார்பன் பைபரால் ஆனது. இந்த வாகனத்திற்கான முன்பதிவு பிப்ரவரி 16-ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இது 1,301 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. இதில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன் இருப்பது சிறப்பாகும்.

கே.டி.எம் 1290 சூப்பர் டியூக் ஆர் எவோ தயாராகும் அதே தளத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது 180 ஹெச்.பி. திறனை 9,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். இதேபோல 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். மோனோ பிளாக் சக்கரங்கள் உள்ளன. கருப்பு, கிரே வண்ணங்களில் இது வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com