

பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபீசர் (இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 11,705 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்துத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.bsnl.co.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2023.