கார்வான் செல்போன்

பிரபல இந்தி பாடல்களின் தொகுப்புகளை சிறப்பாகக் கேட்டு ரசிக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைத் தயாரித்து அளித்துவரும் சரிகம கார்வான் நிறுவனம் தற்போது செல்போன்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
கார்வான் செல்போன்
Published on

லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, கிஷோர்குமார், முகமது ரபி ஆகியோரது பாடல்கள் இதில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1,500 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் இணையதள இணைப்பின்றி விரும்பும் நேரங்களில் விருப்பமானவர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ முடியும். அத்துடன் 2 சிம் கார்டு போடும் வசதி மற்றும் கூடுதல் பாடல்களை பதிவேற்றம் செய்து கொள்ள கூடுதலாக 2 ஜி.பி. இட வசதி ஆகியனவும் இதில் உள்ளது.

பண்பலை வானொலி, டிஜிட்டல் கேமரா, எல்.இ.டி. டார்ச், குரல் பதிவு, அழைப்புகள் பதிவு உள்ளிட்ட வசதிகள் கொண்டது. பச்சை, கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 2,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.4 அங்குல திரையைக் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.2,499. இதில் 1.8 அங்குல திரையைக் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.1,990.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com