மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய மேல்நிலைக் கல்வி வாரியமான (சி.பி.எஸ்.சி.) மத்திய பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (ctet-2020) அறிவிப்பு வெளியீட்டு உள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
Published on

பள்ளிக் கல்வியை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து, ஆரம்பபள்ளி ஆசிரியர்கல்வி டிப்ளமோ அல்லது பட்டதாரி ஆசிரியர் கல்வி படித்தவர்கள், மற்றும் பட்டப் படிப்புடன், இளநிலை ஆசிரியர் கல்வி படித்தவர்கள் 5-ம் வகுப்பு வரையான ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்புடன், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி, இளநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தாள்-1 அல்லது தாள்-2 தேர்வு எழுத விரும்பும் பொது, ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000-ம், இரு தாள்களையும் சேர்த்து எழுதுபவர்கள் ரூ.1200-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல ஏதாவது ஒரு தாள் எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் ரூ.500-ம், இரு தாள்களையும் எழுத விரும்பும் இந்த பிரிவினர் ரூ.600-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24-2-2020-ந் தேதியாகும். இதற்கான தேர்வு ஜூலை மாதம் 5-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.ctet.nic.in விவரங்களை இனி பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com