நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 24 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்த கோல் இந்தியா நிறுவனம்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) கோல் இந்தியா நிறுவனம் 24 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து இருக்கிறது.
நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 24 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்த கோல் இந்தியா நிறுவனம்
Published on

80 சதவீத பங்கு

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கு தலா 61 கோடி டன்னாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் இந்நிறுவனம் 60.7 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்தது. நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 24 கோடி டன்னாக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில் அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் சப்ளை 7 சதவீதம் சரிவடைந்து (23.5 கோடி டன்னில் இருந்து) 21.8 கோடி டன்னாக குறைந்துள்ளது.

2025-26-ஆம் ஆண்டிற்குள் தனது நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அதன் சப்ளை இலக்குடன் ஒப்பிடும்போது இது 16.8 கோடி டன் குறைவாகும். அதே சமயம் தேவை மேலும் அதிகமாகும் பட்சத்தில் மொத்தம் 26.2 கோடி டன் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படும்.

இக்ரா மதிப்பீடு

நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் உற்பத்தி, நிர்ணயித்த இலக்கில் 5.50 கோடி டன் முதல் 7.50 கோடி டன் வரை குறையும் என கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா மதிப்பீடு செய்து இருக்கிறது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையால் சாதாரண நிலக்கரி இறக்குமதி 20 கோடி டன்னை தாண்டும் என அந்த நிறுவனம் கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com