கொரோனா ‘உளவியல்’

கொரோனா நோய் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முன்பு இருந்ததை காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா ‘உளவியல்’
Published on

நுரையீரலின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட நேரிடும். வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பாதிப்பு கொண்ட நோயாளியாகவும் மாறக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் பின்னாளில் மீளமுடியாத நுரையீரல் பிரச்சினைகள் மற்றும் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம் என்று இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது. ஏனெனில் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தாலும் வைரஸ் தாக்குதலுக்கு முன்பு இருந்ததைப் போல நுரையீரலின் செயல்பாடு இருக்காது. அதனால் கவனமாக செயல்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அதிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். புகைபிடிப்பவர்களின் நுரையீரல் ஏற்கனவே பலவீனமாக இருப்பதால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்கள் நுரையீரலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா வைரசும் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி நாள்பட்ட சோர்வு, உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். நோய் தொற்றுவில் இருந்து மீண்டவர்களில் 70 சதவீதம் பேர் மயக்கம், நினைவாற்றல் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகலாம் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com