76 சதவீத இந்தியர்களுக்கு தேவையான வைட்டமின்

இந்தியர்களில் 76 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சூரியக்கதிர்கள் தான் வைட்டமின் டியின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்டாலும் காலை வேளையில் அது உடலில் சில நிமிடங்கள் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடுவது முக்கியமானது.
76 சதவீத இந்தியர்களுக்கு தேவையான வைட்டமின்
Published on

சிலர் நாள் முழுவதும் சூரிய ஒளியே உடலில் படாத அளவுக்கு அறைக்குள்ளேயே முடங்கி கிடங்கும் வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். அது தவறான பழக்கம். சூரிய ஒளியுடன் சில நிமிடங்களை செலவிடுவதோடு வைட்டமின் டி நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைத்துவிடும். அப்படி இருந்தும் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் தினமும் முட்டை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றலாம். முட்டையில் புரதத்துடன் வைட்டமின் டி சத்தும் உள்ளது. முட்டை சாப்பிடுவதன் மூலம் இந்த குறைபாட்டை சமாளிக்க முடியும்.

வைட்டமின் டி, பெரும்பாலும் அசைவ உணவுகளில் இருப்பதால் சைவ பிரியர்கள் பசும்பாலை பருகலாம். அதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை ஈடுசெய்யலாம். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் ஆகியவையும் பசும்பாலில் உள்ளன.

காளானில் வைட்டமின் டி அதிக அளவில் இல்லை என்றாலும் இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்தது. இதனை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை ஓரளவு சமாளிக்கலாம்.

ஆரஞ்சு பழ சீசன் தொடங்கிவிட்டது. இதுதான் வைட்டமின் சி நிறைந்த முக்கிய உணவுப்பொருளாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் வைட்டமின் டியும் ஆரஞ்சு பழத்தில் உள்ளது. அதனை சாப்பிடுவதன் மூலம் துத்தநாகம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உள்பட பல்வேறு வகையான வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்கும்.

சூரிய ஒளிக்கு அடுத்ததாக வைட்டமின் டி குறைபாட்டை போக்கும் சிறந்த பொருளாக மீன் விளங்குகிறது. பல மீன்களில் வைட்டமின் டி அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் சால்மன் மீனில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் அதை உட்கொண்டாலே போதுமானது. வேறு உணவை நாட வேண்டியதில்லை. சோயா பால், சோயா தயிர் போன்ற சோயா பொருட்களும் வைட்டமின் டி குறைபாட்டை நீக்க உதவுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com