'டேட்டா சயின்ஸ்' படிப்பும், கல்வித் தகுதிகளும்...!

கூகுள், பேஸ்புக், யாஹூ, டுவிட்டர்... போன்ற பிரபல டிஜிட்டல் நிறுவனங்களில் டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு அதீத வரவேற்பு இருக்கிறது. பலவிதமான பணிகளில், நல்ல சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
'டேட்டா சயின்ஸ்' படிப்பும், கல்வித் தகுதிகளும்...!
Published on

சமீபத்திய இளைஞர்களின் பேசுபொருளாக மாறியிருக்கும் 'டேட்டா சயின்ஸ்' படிப்பு பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..?

டேட்டா சயின்ஸ்

டிஜிட்டல் உலகில், இணையதளம், சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த தரவுகளைத் தொகுத்து, அவற்றை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து பயன்படக்கூடிய தேவையான தரவுகளைப் பிரித்து குறிப்பிட்ட புதிய தரவுகளை எதிர்காலச் செயல்பாட்டுக்கு தொகுப்பது, தரவு அறிவியல் எனப்படுகிறது. அதாவது டேட்டா சயின்ஸ்.

'டேட்டா சயின்ஸ்' என்பது எண், வெப்பநிலை, ஒலி-ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ, மற்ற குறிப்புகளாகவோ இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்ய, இதுபோன்ற தரவுகளே அடிப்படையாகின்றன. அதை சேகரிப்பதும், அதன்மூலம் பல பயனுள்ள ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதுவுமே 'டேட்டா சயின்ஸ்' துறையின் மிக முக்கிய பணி. ஆராய்பவர், டேட்டா சயின்டிஸ்ட் என அழைக்கப்படுகிறார்.

ஒரு வாரத்தில் பதிவாகியிருக்கும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த வாரங்களில் தொற்றுப் பரவலின் எண்ணிக்கையை கணிப்பது வரை என பல தளங்களில் விரியும் பயன்பாடு என இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளிலும் டேட்டா சயின்ஸின் தாக்கம் பிரதிபலிக்கிறது.

யாரெல்லாம் படிக்கலாம்?

எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் டேட்டா சயின்ஸ் படிக்கலாம். 12 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் படித்தவர்கள், இளங்கலை படிப்புகளுக்கு தகுதியானவர்கள். அதேபோல இளங்கலை படிப்பில் கணிதம், புள்ளியியல், அறிவியல் பயின்ற மாணவர்கள், முதுகலை படிப்பாக டேட்டா சயின்ஸ் படிப்புகளை படிக்கலாம். மற்ற படிப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில், எண்ணற்ற அளவிலான தரவுகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது.

எக்ஸெல் (Excel) குறித்த அறிவும் தேவை. ஆர் (R) ப்ரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாப்ட் பி.ஐ. (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற மென்பொருள் குறித்த அறிவு இருப்பதும் அவசியமானது.

வேலைவாய்ப்புகள்

டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா ஆர்க்கிடெக்ட், டேட்டா மைனிங் என்ஜினீயர், பிசினஸ் இன்டலிஜென்ஸ் அனாலிஸ்ட்... என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளதால், வரும் காலங்களில் மாணவர்களின் தவிர்க்கமுடியாத தேர்வாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com