தினம் ஒரு தகவல் : மனிதன் வாழத்தக்க கிரகம் விண்வெளியில் உள்ளதா?

இன்றுவரை, பால்வெளியில் வாழ்வதற்கு சாத்தியமுள்ளதாக கிரகங்கள் இருப்பதை விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஆனால் பூமியை போன்ற கிரகங்கள் இருப்பதை தேடி கண்டுபிடிக்க புதிய ஆய்வை நாங்கள் நம்பிக்கையுடன் மேற்கொண்டுள்ளோம், நமது மண்டலத்தை சுற்றி சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட பூமியை போன்ற கிரகங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினம் ஒரு தகவல் : மனிதன் வாழத்தக்க கிரகம் விண்வெளியில் உள்ளதா?
Published on

சராசரியாக நட்சத்திரத்தை சுற்றி இரண்டு பூமியை போன்ற கிரகங்கள் இருக்கும் என்ற மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு இந்த குறிப்பிடத்தக்க அறிவிப்பை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். வானவெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளதால் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட பூமியை போன்ற கிரகங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு 200 வருட முந்தைய முறையை பயன்படுத்தி கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முறை டி.டி.எஸ். போடே தொடர்பு என்று கூறப்படுகிறது. இது சூரியனை சுற்றியுள்ள வரிசையின் அடிப்படையில் கிரகங்கள் இருப்பதை கணித்துள்ளது.

மேலும், இது குள்ள கிரகமான செரஸ் வட்டப் பாதை மற்றும் நமது சூரியக் குடும்பத்தில் ஒன்றான ஐஸ் கெய்ன்ட் யுரேனஸ் ஆகியவற்றை சரியாக கணிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் குழு, கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, மல்டிபுள் ப்ளானட் சிஸ்டம்களில் குறைந்தது மூன்று கிரகங்கள் கொண்டிருப்பது அறியப்பட்டது. இந்த 151 கெப்லர் மடங்குகளில் 228 கூடுதல் கிரகங்கள் இருப்பதை டி.டி.எஸ். போடே தொடர்பு முறையை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதை பயன்படுத்தி, ஒவ்வொரு நட்சத்திரத்தின் வாழத்தக்க மண்டலத்துக்குள் சராசரியாக இரண்டு கிரகங்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நட்சத்திரத்தில் இருந்து சிறிய தொலைவில் கோல்டிலாக்ஸ் மண்டலம் என அழைக்கப்படும் கிரகம் உள்ளது, இதில் வாழ்வதற்கு தேவையான வசதி, திரவ நீர் உள்ளிட்டவை இருக்கலாம். மேலும், கெப்லர் தொலைநோக்கி மூலம் நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமான கிரகம் இருப்பதும், அதில் மிகவும் சூடான திரவ நீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் வாழ்கைக்கு தேவையான நீர் உட்பட அத்தியாவசியங்கள் உள்ளதால், மனிதர்கள் வாழக்கூடிய நூற்றுக்கணக்கான பில்லியன் கிரகங்கள் இந்த மண்டலத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com