

சென்னை,
இந்தோனேசியாவின் போர்னியோவில் உள்ள சுங்கை புத்ரி காடுகளில் ஒராங்குட்டான் வகை குரங்குகள், தாங்கள் வாழ்ந்து வரும் வசிப்பிடமான காட்டை அழிக்க புல்டோசர் இயந்திரம் கொண்டு வரப்பட்டதால் அதனுடன் இந்த ஒராங்குட்டான் குரங்கு சண்டை போட்டது.
இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. "ஒரு ஒராங்குட்டான் தனது காடுகளை அழிக்கும் புல்டோசரை எதிர்த்துப் போராட முயல்கிறது" என்று தலைப்பு வைக்கப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் இந்த வீடியோ 2013 இல் படமாக்கப்பட்டது. ஆனால் இப்போது தான் வெளியிடப்பட்டது. விலங்கு நல தொண்டு நிறுவனமான சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எடுத்த வீடியோ இது.
சர்வதேச ஒராங்குட்டான் அறக்கட்டளையின்படி, "ஒராங்குட்டான் அழிவுக்கு பாமாயில் முக்கிய காரணம்.பாமாயில் தோட்டங்களுக்கான காடுகளை அழித்தல் மற்றும் சட்டவிரோத மரங்கள் வெட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கை காரணமாக காடுகள் அழிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.