இதயநோய் அச்சுறுத்தலும், உணவு பழக்க மாற்றமும்...!

இதய நோயைக் கட்டுப்படுத்தும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரே உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம்.
இதயநோய் அச்சுறுத்தலும், உணவு பழக்க மாற்றமும்...!
Published on

பெரும்பாலானவர்களின் பரிந்துரை போல் நாங்கள் முற்றிலுமாக சைவத்துக்கு மாறச் சொல்வதில்லை. மீன் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்பற்ற அசைவத்தை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளச் சொல்கிறோம். சர்க்கரை, மதுபானம் உள்ளிட்டவற்றைக் கூட நிறுத்தச் சொல்லாமல் குறைத்துக் கொள்ளவே பரிந்துரைக்கிறோம்.

இந்தியாவில் இதயநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம். அப்போது, ஆண்களில் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைபவர்களில் 34 சதவிகிதம் பேரும், பெண்களில் 32 சதவிகிதம் பேரும் இதய நோயால் மரணம் அடைவார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மன அழுத்தம், அதிக அளவு கொலஸ்ட்ரால், உடற் பயிற்சி ஏதும் இல்லாத நிலை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கூடுதல் எடை, புகைப் பழக்கம் மற்றும் மது அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

''இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை. ஆனால், அப்படிப்பட்ட பைபாஸ் சர்ஜரியை தவிர்க்கலாம்... உணவுப் பழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இதய நோயை ஓட ஓட விரட்டி விடலாம்'' என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான டீன் ஆர்னிஷ்.

அமெரிக்க மருத்துவ அசோசியேஷனின் பத்திரிகையான 'ஜாமா'வில் இவரது விரிவான ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

''இன்றைய தேதியில் இதய நோயைக் கட்டுப்படுத்தும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரே உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் இதுதான்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

''பெரும்பாலானவர்களின் பரிந்துரை போல் நாங்கள் முற்றிலுமாக சைவத்துக்கு மாறச் சொல்வதில்லை. மீன் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்பற்ற அசைவத்தை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளச் சொல்கிறோம். சர்க்கரை, மதுபானம் உள்ளிட்டவற்றைக் கூட நிறுத்தச் சொல்லாமல் குறைத்துக் கொள்ளவே பரிந்துரைக் கிறோம்.

70 முதல் 75 சதவீத கலோரியை கார்போஹைட்ரேட்ஸ் மூலமும் 15 முதல் 20 சதவீத கலோரியை புரோட்டீன்கள் மூலமும், பெறுவதே எங்கள் உணவுத் திட்டத்தின் நோக்கம். அதோடு கொஞ்சம் மனப் பயிற்சியும் அவசியம்'' என்கிறார் டாக்டர் டீன் ஆர்னிஷ்.

இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இதயநோய் வராது என்பதோடு, மாரடைப்பின் விளிம்பு நிலையில் இருப்பவர்களைக் கூட மெல்ல மெல்ல குணமாக்கி, மாத்திரை கூடத் தேவைப்படாத நார்மல் மனிதர்களாக்கி விடுகிறதாம் இது.

இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் இந்த உணவுத் திட்டத்தையும் மனப் பயிற்சியையும் டீன் உருவாக்கியது எப்படித் தெரியுமா? இந்தியாவைப் பார்த்துத்தான்.

''உலகின் மிக முக்கிய பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இருந்தே தொடங்குகிறது. இந்தியர்களை அடிப்படையாக வைத்தே, இந்த பிரச் சினைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம்'' என்று டாக்டர் டீன் ஆர்னிஷே குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com