கிரான்பெர்ரியை தவிர்க்காதீர்கள்

குருதிநெல்லி என தமிழில் அழைக்கப்படும் கிரான்பெர்ரி பழம் புளிப்புச் சுவை கொண்டது. இதனால் மிகச் சிலரே இந்த பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள்.
கிரான்பெர்ரியை தவிர்க்காதீர்கள்
Published on

ஊறுகாய், சட்னி, பழ ஜூஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடை காலத்தில் அதிகமாக விளையும் இந்த பழம், சுவையில் குறைபாடு கொண்டிருந்தாலும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குகிறது.

கிரான்பெர்ரியை உட்கொள்வதன் மூலம், வயிறு ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும். வயிற்றுபோக்கு போன்ற பிரச்சினையை நீக்கி, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கிரான்பெர்ரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாக அமையும். முக்கியமாக இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பிற நோய்களின் வீரியத்தை குறைக்கவும் செய்யும். இதில் இரும்புச்சத்து உள்ளது. அது உடலில் ஏற்படும் ரத்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் தன்மையும் கொண்டது.

மேலும் குருதிநெல்லியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் சோர்வின்றி செயல்பட முடியும். உடல் எடையை குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். இது தவிர உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதற்காகவே கிரான்பெர்ரியை தினமும் சாப்பிட வேண்டும். ஊறுகாய் வடிவில் கூட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com