மா இலைகளை தவிர்க்காதீர்கள்..!

இது மாம்பழ சீசன். எல்லா வகையான மாம்பழங்களையும் ருசி பார்ப்பதற்கு பலரும் விரும்புவார்கள். மாம்பழத்தை மட்டுமல்ல அதன் இலைகளை கூட உண்ணலாம். அதுவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டதுதான்.
மா இலைகளை தவிர்க்காதீர்கள்..!
Published on

பல்வேறுவிதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தன்மை மா இலை களுக்கு உண்டு. சரும சுருக்கம், வயதான அறிகுறிகள், தோல் வறட்சி போன்றவற்றை குறைப்பதற்கு மா இலைகள் உதவும். மா இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தீக்காயங்களுக்கு நிவாரணமளிக்கும். மா இலைகளை எரித்து அதன் சாம்பலை தீக்காயத்திற்கு தடவி வரலாம்.

முடி உதிர்வு, முடி வெடிப்பு, முடி வளர்வதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் மா இலைகளை பயன்படுத்தலாம். அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும். முடி வளர்ச்சியையும் விரைவு படுத்தும்.

சிறுநீரக கல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் மா இலை சாற்றை உட்கொள்ளலாம். அது சிறுநீரக கற்களை உடைத்து, சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவும். நீரிழிவு நோயாளிகளும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மா இலைகளை பயன் படுத்தலாம். அது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை நிர் வகிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. விக்கலை நிறுத்துவதற்கும் மா இலை பயன்படும். வயிற்றுப் புண்களை குணப்படுத்தவும் உதவும். மா இலையை டீயாக தயாரித்து பருகி வரலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com