செல்போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா.. ரீஸ்டார்ட் செய்தால் வேகம் அதிகரிக்குமா?

ரீஸ்டார்ட் செய்வதால் உண்மையிலேயே செல்போனின் வேகம் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது.
செல்போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா..  ரீஸ்டார்ட் செய்தால் வேகம் அதிகரிக்குமா?
Published on: 

செல்போன்கள் இன்று அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டன. அழைப்புகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள் என பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறோம். இந்நிலையில், சில நேரங்களில் செல்போன் மெதுவாக இயங்குவது, செயலிகள் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது, டச் ஸ்கிரீன் செயல்படாதது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற நேரங்களில் செல்போனை ரீஸ்டார்ட் செய்யும்படி பலரும் அறிவுறுத்துகின்றனர். ஆனால், ரீஸ்டார்ட் செய்வதால் உண்மையிலேயே செல்போனின் வேகம் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

தற்காலிகமாக வேகம் அதிகரிக்குமா?

செல்போனை ரீஸ்டார்ட் செய்யும்போது பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் செயலிகள் மீண்டும் தொடங்குகின்றன. இதனால் தற்காலிக மென்பொருள் கோளாறுகள் சரியாகவும், செயலிகள் முடங்குவது போன்ற பிரச்சினைகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, செல்போன் திடீரென மெதுவாக இயங்கும்போது ஒருமுறை ரீஸ்டார்ட் செய்வது உதவியாக இருக்கும்.

அடிக்கடி ரீஸ்டார்ட் செய்ய வேண்டுமா?

செல்போனை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வதால் அதன் வேகம் நிரந்தரமாக அதிகரித்துவிடாது. நவீன ஸ்மார்ட்போன்கள் மெமரி பின்னணி செயல்பாடுகளையும் தானாகவே நிர்வகிக்கும் திறன் கொண்டுள்ளன. மேலும், ஒவ்வொரு முறையும் செல்போனை ஆஃப் செய்து மீண்டும் இயக்கும்போது சிறிதளவு பேட்டரி மின்சாரமும் வீணாகும்

செல்போன் மெதுவாக இயங்கினால் என்ன செய்ய வேண்டும்?

செல்போன் மெமரியில் போதிய இடம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தேவையற்ற செயலிகளை நீக்குவது, பயன்படுத்தாத செயலிகளை மூடுவது, செயலிகளையும் செல்போன் மென்பொருளையும் புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகள் வேகத்தை மேம்படுத்த உதவும். எனவே, செல்போன் ஸ்லோவாக இயங்கும்போது ரீஸ்டார்ட் செய்வது ஒரு தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து இதே பிரச்சினை ஏற்பட்டால் அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வதே சிறந்த வழியாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com