சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Published on

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சுருக்கமாக சி.எம்.டி.ஏ. எனப்படுகிறது. தற்போது இந்த அரசு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், களப் பணியாளர், செய்தியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 131 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்தந்த பணி வாரியான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணி விவரங்களையும் அதில் காணலாம்.

இந்திய குடியுரிமை பெற்றவர்கள், விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். அந்தந்த பணிக்குத் தொடர்புள்ள கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 24-ந் தேதியாகும். www.cmdachennai.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com