வேலைவாய்ப்பு செய்திகள்: 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி

அசாம் ரைபிள் சார்பில் ரைபிள்மேன், ஹவில்தார் போன்றவற்றில் பல்வேறு பணி பிரிவுகளில் 152 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்: 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி
Published on

18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடல் திறன் தேர்வு, எழுத்து தேர்வு, பணி திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து டைரக்டரேட் ஜெனரல் அஸ்ஸாம் ரைபிள்ஸ் (ஆட்சேர்ப்பு கிளை), லைட்கோர், ஷில்லாங், மேகாலயா - 793010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை rectbrdgr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் விரிவான விவரங்களை https://www.assamrifles.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com