வேலைவாய்ப்பு செய்திகள்: என்ஜினீயர்களுக்கு வேலை

சென்னையில் இயங்கும் ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் என்ஜினீயர் வேலைக்கு 191 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்: என்ஜினீயர்களுக்கு வேலை
Published on

சென்னையில் இயங்கும் ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் சார்ட் சர்வீஸ் கமிஷன் மூலம் சிவில், கட்டுமான தொழில்நுட்பம், கட்டிடக்கலை, இயந்திரவியல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் கணினி தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பிரிவுகளில் 191 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பணியின்போது இறந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு 35 வயது வரை வயது தளர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com